"பாலஸ்தீனத்தை விடுவித்திடுக..!!" தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் பலி...

போலீசாரால் மீட்கப்பட்ட விமானப்படை வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Feb 27, 2024 - 12:20
"பாலஸ்தீனத்தை விடுவித்திடுக..!!" தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் பலி...

பாலஸ்தீனத்தை விடுவிக்கக்கோரி வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். அதில் ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசாவில் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அமெரிக்காவின் விமானப்படை வீரரான 25 வயது இளைஞர் ஆரோன் புஷ்னெல் தீக்குளித்தார். ராணுவ சீருடை அணிந்தவாறு இனப்படுகொலைக்கு இனியும் ஆதரவாக இருக்க மாட்டேன் எனக்கூறி தனக்குத் தானே அவர் தீவைத்துக் கொண்டார்.

தீப்பற்றி எரிந்தபோதும், பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என பலமுறை கூறிய அவர், சரிந்து விழுந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow