உளவுத்துறை டிஐஜி பெயரிலேயே மோசடி! பலே திருடனுக்கு வலை...

புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Feb 27, 2024 - 13:49
உளவுத்துறை டிஐஜி பெயரிலேயே மோசடி! பலே திருடனுக்கு வலை...

முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு மற்றும் உளவுத்துறை டிஐஜி-ஆக உள்ள திருநாவுக்கரசு பெயரில் பாஸ் ஸ்கேம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஐஜி திருநாவுக்கரசர் புகைப்படத்துடன் போலி பேஸ்புக் கணக்கைத் தொடங்கிய மர்ம நபர் ஒருவர், திருநாவுக்கரசின் நண்பர் சிவகுமார் என்பவரை மெசெஞ்சர் மூலமாகத் தொடர்பு கொண்டு உள்ளார்.இதையடுத்து, அந்த மோசடி நபர் சி.ஆர்.பி.எப் முகாமில் உள்ள தனது நண்பர் சந்தோஷ் குமார் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், அவர் தனது வீட்டில் பயன்படுத்திய பொருட்களைக் குறைவான விலையில் விற்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். 

மேலும், அந்த பொருட்களை வாங்க விரும்புகிறவர்கள் தனக்கு உடனடியாக பணம் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த சிவகுமார் உடனடியாக டி.ஐ.ஜி திருநாவுக்கரசை தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டுள்ளார். அப்போது அது மோசடி நபர் எனவும் தனது பெயரில் உருவாக்கப்பட்டது போலியான கணக்கு எனவும் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, தனது பெயரில் போலிக் கணக்கு தொடங்கி மோசடி செய்து வரும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநாவுக்கரசு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உளவுத்துறை பாதுகாப்பு டி.ஐ.ஜி. பெயரிலேயே மோசடி நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow