வெள்ள பாதிப்பை மக்கள் மறந்து விடக்கூடாது-அன்புமணி ராமதாஸ்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் வெள்ள நிவாரணம் கொடுக்க வேண்டும்

Dec 9, 2023 - 12:17
Dec 9, 2023 - 16:16
வெள்ள பாதிப்பை  மக்கள் மறந்து விடக்கூடாது-அன்புமணி ராமதாஸ்

சென்னையை சுற்றி ஒரு டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்கின்ற அளவிற்கு 10ஏரிகளை உருவாக்குங்கள்,மன்னர்கள் தான் ஏரியை உருவாக்க வேண்டுமா,மக்கள் ஆட்சியில் ஏரிகளை உருவாக்க கூடாதா ? ஆக்கிரமிப்பில் வீடுகள் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை சிறையில் தள்ளுங்கள் என  அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

 காஞ்சிபுரம்,உத்திரமேரூர் தொகுதிகளின் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்  காஞ்சிபுரத்தில் உள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “சென்னையை சுற்றி சுமார் 250 முதல் 300 ஏரிகள் இந்த திராவிட ஆட்சிக் காலத்தில் காணாவில்லை.இந்த ஏரிகள் மீது தான் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

முகப்பேறு ஏரி திட்டம் என சொல்லி ஏரிக்கு மேல் குடியிருப்புகளை கட்டியிருக்கிறார்கள். சென்னையை சுற்றி ஒரு டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்கின்ற அளவிற்கு 10 ஏரிகளை உருவாக்குங்கள். மன்னர்கள் தான் ஏரியை உருவாக்க வேண்டுமா,மக்கள் ஆட்சியில் ஏரிகளை உருவாக்க கூடாதா ? ஏரிகளை உருவாக்க வேண்டும். சென்னையை சுற்றி 10கிமீ சுற்றளவில் புதிதாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டிலுள்ள 33 பெரிய ஆறுகளில் ஒவ்வொரு 10கிமீ தொலைவிற்கும் புதிய தடுப்பணைகளை கட்ட வேண்டும். அதற்க்கான நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகனை நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

மேலும் பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு முதலில் 4800ஏக்கர் என சொன்னவர்கள் தற்போது கூடுதலாக 1000ஏக்கர் என 5800 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்படவுள்ளதாக சொல்லுகிறார்கள். இயற்கையை மாற்ற கூடாது. இயற்கை இயற்கையாகவே இருக்க வேண்டும்.விவசாய நிலங்கள் நீர்நிலை உள்ள பரந்தூரில் அமைக்க கூடாது.சென்னைக்கு அருகே உள்ள திருப்போரூரில்  5000 ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது.அதில் அமைக்கலாம்.

மேலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஏரி ஆக்கிரமிப்பு அனுமதி வழங்குகிறார்கள். இந்த விஷயத்தில் அனுமதி அளிக்கும் அதிகாரிகள் சிறையில் தள்ளுங்கள் என ஆவேசமாக தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் வெள்ள நிவாரணம் கொடுக்க வேண்டும். ஆனால் நிவாரணம் கொடுத்தாலும் மக்கள் வெள்ள பாதிப்பை மறந்து விடக்கூடாது.மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow