ராஞ்சி டெஸ்டில் களமிறங்குகிறாரா ஆலி ராபின்சன்?
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில் அடுத்தடுத்த டெஸ்ட்டுகளை இந்திய அணி வென்றது.
தொடரைக் கைப்பற்ற வேண்டுமென்றால் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றிபெற்றாக வேண்டும். முன்னதாக, நான்காவது, ஐந்தாவது டெஸ்டுகளில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற முயல்வோம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், ராஞ்சி டெஸ்டில் மூத்த வீரர் ஆண்டர்சன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிரு டெஸ்டுகளில் ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளருடன் தான் இங்கிலாந்து களமிறங்கியது. 19 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ஆலி ராபின்சன், 22.21 என்ற சராசரியில் 76 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக பந்துவீசிய அவர், 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒற்றை வேகப்பந்து வீச்சாளராக ஆலி ராபின்சன் களமிறங்கும் நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?