பேஸ்பால் ஆட்டத்தை விட்டுவிடுங்கள்.. அறிவுரை வழங்கிய ஆஸி. ஜாம்பவான்!
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட், பேஸ்பால் பாணியில் பேட்டிங் செய்வதை விட்டொழிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் இயான் சேப்பல் வலியுறுத்தியிருக்கிறார்.
மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் கூட்டணி தலைமைக்கு வந்த பிறகு இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக சாதித்து வருகிறது. பேஸ்பால் அணுகுமுறைக்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்தாலும் சரிக்கு சமமான விமர்சகர்களும் இருக்கத்தான் செய்கிறது.
நடப்பு இந்திய சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். ஆல்ரவுண்டராகவும் களமிறங்குவதால் பேட்டிங்கில் அவரால் கவனம் செலுத்த முடிவதில்லை. ராஜ்கோட் டெஸ்டில் பும்ரா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ரூட் ஆட்டமிழந்தார்.
ரூட் ஆட்டமிழந்த விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றின் மோசமான ஷாட் என்று இங்கிலாந்து ஊடகங்கள் வர்ணிக்கின்றன. இந்த நிலையில், ஜோ ரூட் பேஸ்பால் பாணி ஆட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் வலியுறுத்துயுள்ளார்.
எல்லா சமயங்களிலும் ரூட் அதிரடியாக விளையாடுவதற்கு முயற்சிக்க கூடாது என்று தெரிவித்த இயான் சேப்பல், பந்து வீச்சாளர் நன்றாக வீசும்போது மரியாதை கொடுத்து ஆடவேண்டும் என்றார். ரூட் தரமான வீரர் என்று பாராட்டிய சேப்பல், தனது வழக்கமான பாணியில் விளையாடினாலே ரூட்டால் ரன் குவிக்க முடியுமென்று தெரிவித்தார்.
What's Your Reaction?