"விண்வெளியில் இந்தியா சாதிப்பது வியக்க வைக்கிறது" - இஸ்ரோவை பாராட்டிய ஐரோப்பிய விண்வெளி இயக்குனர்

Mar 30, 2024 - 11:34
Mar 30, 2024 - 11:41
"விண்வெளியில் இந்தியா சாதிப்பது வியக்க வைக்கிறது" - இஸ்ரோவை பாராட்டிய ஐரோப்பிய விண்வெளி இயக்குனர்

விண்வெளியில் இந்தியாவின் சாதனை வியக்க வைப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) 323-வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் ESA இயக்குநர் ஜோசப் அஷ்பேச்சர் தனது X தளத்தில், விண்வெளியில், குறிப்பாக சந்திரன் ஆய்வில் இந்தியாவின் சாதனை ஆச்சர்யமளிப்பதாக பாராட்டியுள்ளார். கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரோவின் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அறிய வாய்ப்பு கிடைத்தது ஒரு மைல்கல் சந்தர்ப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட், இஸ்ரோ தலைவர் மற்றும் ESA இயக்குநர் இடையேயான சந்திப்பு பற்றி தனது X தளத்தில், இஸ்ரோ தலைவர் சோமநாத்தை வரவேற்றதில் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சோமநாத், ஜோசப் அஷ்பேச்சர் இடையே உற்சாகமான பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும், இரு நிறுவனங்களும் இணைந்து ஒன்றாக விண்வெளிக்கு பயணிப்போம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டில் சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கி செயல்பட்டதும், இந்தியா தனது முதல் அர்ப்பணிக்கப்பட்ட சூரியப் பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம் ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow