ரூ.1 லட்சம் கரண்ட் பில் விவகாரம்: கங்கனாவுக்கு பதிலடி கொடுத்த மின்சார வாரியம்
இமாச்சல் பிரதேசத்திலுள்ள ஆளில்லாத என் வீட்டுக்கு கரண்ட் பில் 1 லட்சம் வந்துள்ளது என கங்கனா ரனாவத் பேசியது வைரலாகிய நிலையில் ஹிமாச்சல் அரசு அதற்கு பதிலளித்துள்ளது.

இமாச்சல் பிரதேசத்திலுள்ள மண்டி மக்களவை தொகுதியில், பாஜகவின் வேட்பாளராக களமிறங்கி வென்று எம்.பி-யானார் புகழ்பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற கங்கனா, ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் மாநில அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதிலும் குறிப்பாக மணாலியிலுள்ள தனது வீட்டிற்கு மின் கட்டணமாக ரூ.1 லட்சம் பில் வந்துள்ளது என பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதற்கு, நடிகையும்,எம்.பி-யுமான கங்கனா தவறான தகவல்களை கூறியுள்ளார் என ஆளும் காங்கிரஸ் அரசின் சார்பில் உரிய விளக்கம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கூட்டத்தில் பேசிய கங்கனா, "இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. இத்தனைக்கு நான் அங்கு தங்கவே இல்லை. எனக்கே இப்படியென்றால், மற்றவர்களின் நிலைமைகளை நிலைமைகளை கற்பனை செய்து பாருங்கள்." எனக் குறிப்பிட்டார்.
டைமுக்கு பில் கட்டவில்லை: மின்சாரத்துறை விளக்கம்
இந்த வீடியோ வைரலாகிய நிலையில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் மின்சார வாரியம், கங்கனாவின் வீட்டிற்கு விதிக்கப்பட்டது ஒரு மாத கட்டணம் அல்ல என விளக்கம் அளித்துள்ளது. இதுத்தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ” எம்.பி கங்கனா அவரது வீட்டிற்கான மின் கட்டணத்தொகை கடந்த இரண்டு மாதங்களுக்கு ரூ.90,384. இந்த தொகையானது, இதற்கு முந்தைய மின் கட்டண பில்லிலுள்ள நிலுவைத் தொகையும் அடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஹிமாச்சலப் பிரதேச மின்சார வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார் கூறுகையில், "பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறு மின்சார வாரியம் கேட்டுள்ளதாக ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளார். பில் கிட்டத்தட்ட ரூ.91,000. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான கட்டணங்கள் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளன. கடைசியாக நவம்பர்-டிசம்பர் மாதங்களுக்கான பில் ஜனவரி 16 ஆம் தேதி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 14,000 மின்யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின்கட்டணமானது அபராதத் தொகையையும் உள்ளடக்கியது. மேலும், ரனாவத் தொடர்ந்து மின் கட்டணத்தை தாமதமாக தான் செலுத்தி வருகிறார்” எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத் வீட்டின் மாதாந்திர மின்சார நுகர்வு சராசரியாக 5,000 முதல் 9,000 யூனிட்டுகள் வரை உள்ளது என்பதும் இப்பிரச்சினையின் வாயிலான விசாரணையில் தெரிய வந்துள்ளது.
What's Your Reaction?






