memories-ஐ மீம்ஸாக்கி கலாய்க்கும் ரசிகர்கள் ! Head-ஐ வெறும் வாட்டர் பாயாக பயன்படுத்திய RCB!

டிராவிஸ் ஹெட் அணியில் வாட்டார்பாயாக இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து மீம்ஸ்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.

May 9, 2024 - 18:24
memories-ஐ மீம்ஸாக்கி கலாய்க்கும் ரசிகர்கள் ! Head-ஐ வெறும் வாட்டர் பாயாக பயன்படுத்திய RCB!

ஐபிஎல்லில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய ஐதராபாத் அணி, 166 ரன்களை வெறும் 9.4ஓவரின் சேஸ் செய்து வரலாற்று சாதனை படைத்தது. 

2024 ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே பயங்கரமான பேட்டிங் ரெக்கார்டுகளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி செய்து வருகிறது. குறிப்பாக பல காலமாக ஆர்.சி.பி கட்டி காத்து வந்த 263 ரன் எடுத்த ரெக்கார்ட்டை அடுத்தடுத்து உடைத்து அதகளம் செய்தது. 

அதன்படி இந்த சீசனில் மட்டும் அந்த ரெக்கார்டை மூன்று முறை  உடைத்தது. அதன்படி 277, 287, 266 ஆகிய எக்குத்தப்பான ஸ்கோர்களை அடுத்தடுத்த போட்டிகளில் பதிவு செய்தது. 

இந்தாண்டு பேட் கம்மின்ஸ் தலைமையில் கூடுதல் உற்சாகத்துடன் அந்த அணி  களமிறங்கியுள்ளது. அபிசேக் சர்மா, நித்திஷ் ரெட்டி, கிளாசன், அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது. குறிப்பாக டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டத்தால் பயங்கரமான ஸ்கோர்களை அடித்து வருகிறது. 

அந்தவகையில் நேற்றைய போட்டியிலும், வெறும் 9.4ஓவரில் 166 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது ஐதராபாத் அணி. இதில் 30 பந்துகளில் 89 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய வீரர் ஹெட் அதிரடி காட்டினார். 

முன்னொரு காலத்தில் இவரை அணியில் வைத்திருந்த ஆர்சிபி, அவரை வெறும் வாட்டர்பாயாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடதக்கது. இதனை தற்போது நினைவுப்படுத்திய ரசிகர்கள் ஆர்சிபி அணியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். 

ஏனெனில், ஆர்சிபி அணி ரிலீஸ் செய்த ஷேன் வாட்சன், ஷிவம் துபே, கே.எல்.ராகுல், கெயில், சாஹல் பல வீரர்கள் மற்ற அணிகளுக்கு சென்று அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி துவம்சம் செய்திருக்கின்றனர். அவர்களை ஒழுங்காக பயன்படுத்தியிருந்தால் "ஈ சாலா எப்போதே கப்பு உங்களது ஆகியிருக்கும்" என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். அத்துடன் டிராவிஸ் ஹெட் அணியில் வாட்டார்பாயாக இருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து மீம்ஸ்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow