அம்மாவிற்கு தொல்லை கொடுத்த தந்தை... கொடூரமாக கொலை செய்த மகன்... அதிர்ச்சியில் மதுரை..!
மதுரை அருகே உறங்கான்பட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உறங்கான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லபாண்டி. இவர் சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து அதே பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகன் இருக்கிறார்.
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக, செல்லபாண்டி பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வப்போது வீட்டுக்கு வரும் செல்லபாண்டி, மனைவி சத்யாவை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
அம்மாவின் அழுகை அவரது மகனை கோபப்படுத்தியது. அப்பாவை என்ன செய்வது என்று யோசித்த மகன், நேற்றிரவு (மே 8) தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டிற்கு வந்த செல்லப்பாண்டி, நண்பர்களை துன்புறுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகன், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அதிகாலையில், செல்லபாண்டியை தனியாக அழைத்துச் சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒத்தக்கடை போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, செல்லபாண்டியின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். தினசரியும் அம்மாவிற்கு தொல்லை கொடுத்து வந்த அப்பாவை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






