Raayan First Single: வெளியானது ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்… வெறித்தனம் காட்டிய தனுஷ், AR ரஹ்மான்!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.

May 9, 2024 - 18:25
May 9, 2024 - 18:28
Raayan First Single: வெளியானது ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்… வெறித்தனம் காட்டிய தனுஷ், AR ரஹ்மான்!

சென்னை: பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் ராயன். இதில் ஹீரோவாக தனுஷும் லீடிங் ரோலில் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்ட சிலரும் நடித்துள்ளனர். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயனுக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வட சென்னையை பின்னணியாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் ராயன் படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இதனால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், ராயன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் ‘அடங்காத அசுரன்’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கான வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். அதேபோல், பிரபுதேவா கோரியோகிராபி செய்ய, ஏஆர் ரஹ்மானும் தனுஷும் இணைந்து பாடியுள்ளனர். போகி பண்டிகை பின்னணியில் நைட் விஷுவல் ட்ரீட்டாக வெளியாகியுள்ளது ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள். தனுஷும் ஏஆர் ரஹ்மானும் இந்தப் பாடலை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிளுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூன் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனால் அடுத்தடுத்து ராயன் படத்தில் இருந்து அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ராயனுக்குப் போட்டியாக சீயான் விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படமும் ஜூன் 13ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow