தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்! 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Mar 11, 2024 - 18:20
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்! 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதன் ஆணையராக இருந்த பழனிக்குமாரின் பணிக்காலம் மார்ச் 9 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை செயலாளராக இருந்த ஜோதி நிர்மலாசாமியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக தமிழக அரசு நியமித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow