Aavesham OTT Release: ஓடிடியிலும் மாஸ் காட்டும் ஆவேசம்… ரங்கா பாய்ஸ் ஆட்டம் வெறித்தனமா இருக்குதே!

மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

May 9, 2024 - 11:28
Aavesham OTT Release: ஓடிடியிலும் மாஸ் காட்டும் ஆவேசம்… ரங்கா பாய்ஸ் ஆட்டம் வெறித்தனமா இருக்குதே!

சென்னை: மலையாள திரையுலகில் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் ஃபஹத் பாசிலுக்கு கோலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்துள்ள ஃபஹத், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே மலையாளத்தில் ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்த ஆவேசம் திரைப்படம் கடந்த மாதம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியானது. ரோமஞ்சம் பிரபலம் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

ஆவேசம் ஜித்து மாதவனின் இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஃபஹத் பாசில் – ஜித்து மாதவன் காம்போவில் வெளியான இந்தப் படம் அதிரி புதிரியாக சம்பவம் செய்தது. கேங்ஸ்டர் ஜானரில் டார்க் காமெடி, ஆக்‌ஷன் ப்ளஸ் சென்டிமென்ட் என பக்கா கமர்சியல் ட்ரீட்டாக ஆவேசாம் படத்தை இயக்கியிருந்தார் ஜித்து மாதவன். ஆனாலும் நடிப்பில் ஒன் மேன் ஆர்மியாக ஃபஹத் பாசில் செய்த சேட்டைகள் ரசிகர்களை சிலிர்க்க வைத்தன. இன்டர்வெல் ப்ளாக், க்ளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் திகட்டாத கூஸ்பம்ஸ் மொமண்ட்டாக அமைந்தது. 

இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் ஆவேசம் படத்தின் வசூல் ஆர்ப்பரிக்க வைத்தது. அதன்படி இந்தப் படம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்தது. தமிழ்நாட்டில் மட்டுமே 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படுகிறது. முக்கியமாக ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்து 100 கோடி கலெக்‌ஷன் செய்த முதல் படம் என்ற பெருமையையும் ஆவேசம் தட்டிச் சென்றது. அதேபோல் 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் ஆவேசம் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்நிலையில் படம் வெளியாகி 28 நாட்களில் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது ஆவேசம். அதன்படி இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ஆவேசம் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டரில் ஆவேசம் படத்தை கொண்டாடியதை விட ஓடிடி ரசிகர்களின் அட்ராசிட்டி டிவிட்டரையே அலற விட்டுள்ளது. ஆவேசம், ஃபஹத் பாசில் போன்ற ஹேஷ்டேக்களை ட்ரெண்ட் செய்து ரங்கா, அம்பன், நஞ்சப்பா கேரக்டர்களை கொண்டாடி வருகின்றனர்.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow