தொகுதி பக்கமே வராத திமுக எம்பிக்கள்... மக்கள் பார்த்ததே இல்லையே... போட்டு தாக்கும் எஸ்.பி.வேலுமணி
38 திமுக எம்பிக்களையும் கடந்த 5 ஆண்டுகாலமாக மக்கள் பார்த்ததே இல்லை என்று விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி.
38 திமுக எம்பிக்களையும் கடந்த 5 ஆண்டுகாலமாக மக்கள் பார்த்ததே இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி விமர்சித்துள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதராவாக சென்னிமலை அடுத்துள்ள முருகந்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “இந்த மக்களவைத் தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல்.
கடந்த மூன்று ஆண்டுகள் திமுக அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக இப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட சாலை திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் போன்ற அனைத்துத் திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.
போதைப்பொருள் விற்பனை குறித்துப் பேசும்போது, “தமிழகத்தில் இளைஞர்களை அழிக்கக்கூடிய கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையை திமுகவினரே நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக நமது இளைஞர்களை காப்பாற்றவும், ஈரோடு மக்களவைத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால், அதிமுக ஆட்சி வரவேண்டும்.
மேலும், “எப்போது சட்டசபைத் தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரை முதல்வராக தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள், அதற்கு அச்சாரமாகதான் இந்த மக்களவைத் தேர்தல் வந்துள்ளது. தற்போது திமுக எம்பிக்கள் யாரும் களத்தில் இல்லாததற்குக் காரணம், கடந்த ஐந்து ஆண்டுகள் திமுகவின் 38 எம்பிக்களை மக்கள் பார்த்ததே இல்லை. அவர்களுக்கு யாரும் ஓட்டு போட போவதில்லை என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார் எஸ்.பி. வேலுமணி.
What's Your Reaction?