நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
பெங்களூரு நீதிமன்றம் உத்தரவின்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வசூலித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு நீதிமன்றம் உத்தரவின்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வசூலித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. கடந்த பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது என்ற காரணங்களுக்குகாக ரத்து செய்யப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிமலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவரை விசாரணை செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றம் உத்தரவின்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வசூலித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் நடைமுறைக்கும் வரும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குப்பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?