Fire ஆன Controll Room JAM ஆன Lift - அலறிய Officers ஆட்சியரகத்தில் அபாய குரல்
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் மின் தடை ஏற்பட்ட நிலையில், லிஃப்டில் சென்ற 8 பேர் சிக்கிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு பல பணிகள் டிஜிட்டல் முறையில் தான் செய்யப்படுகிறது. பல பணியாளர்கள், மக்கள் ஒவ்வொரு தளங்களுக்கும் சிரமம் இல்லாமல் சென்று வர மின்தூக்கிகளும் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள மின் கட்டுப்பாட்டு அறையில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பணியில் இருந்த ஊழியர் சந்தோஷ் படுகாயமடைந்த நிலையில், அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதன் எதிரொலியாக ஆட்சியர் அலுவலத்தில் மின் தடை ஏற்பட்ட நிலையில், ஏ பிளாக்கில் உள்ள இரு மின் தூக்கிகளும் பாதியில் நின்றன. அப்போது ஒரு மின் தூக்கியில் சென்ற 8 பேர் உள்ளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனால் பதறிபோன மக்கள் அபாய குரல் எழுப்பினர். இதைக்கண்டு அங்கு ஓடிச்சென்ற பொதுமக்கள் மின் தூக்கியை திறக்க முயற்சி செய்தனர்.
தொடர்ந்து 20 நிமிட போராட்டத்திற்கு பின் மின்தூக்கியின் கதவு சாவி மூலம் திறக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உடனடியாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு மின்மாற்றியை சரி செய்யும் பணி நடைபெற்ற நிலையில், இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகமே ஆடிப்போனது.
What's Your Reaction?