எல்லை கடந்து மகிழ்ச்சி பிரண்ட்ஷிப்னா சும்மாவா..! சர்ப்ரைஸ் கொடுத்த இந்தோனேசியா நண்பர்கள்

அயல்நாட்டு நண்பர்களை அலங்கார வண்டியில் ஏற்றி மாலை மரியாதையுடன் மேளதாளம் முழங்க வரவேற்பு

எல்லை கடந்து மகிழ்ச்சி  பிரண்ட்ஷிப்னா சும்மாவா..!  சர்ப்ரைஸ் கொடுத்த இந்தோனேசியா நண்பர்கள்

கல்யாணம், காதுகுத்து என உள்ளூரில் இருக்கும் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைத்தால், மொக்க காரணங்களைக் கூறி எஸ்கேப் ஆகி விடுவார்கள். அவர்களுக்கு மத்தியில், நண்பர் மகன்களின் காதுக்குத்துக்காக இந்தோனேசியாவில் இருந்து கடல் கடந்து இந்தியாவுக்கு வந்து கலந்துகொண்டிருக்கின்றனர் பாசமிகு அயல்நாட்டு நண்பர்கள்...

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த ரவிபாரதி இந்தோனேசியாவில் பணியாற்றி வரும் நிலையில், தன்னுடன் பணியாற்றும் நண்பர் மகன்களின் காதுக்குத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். இதனை ஏற்று உடனே பிளைட் ஏறிய நண்பர்கள் இந்தியா வந்தனர். 

கடல் கடந்து வந்த அயல்நாட்டு நண்பர்களை அலங்கார வண்டியில் ஏற்றி மாலை மரியாதையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்துள்ளால் நாகை நண்பர். இதனால், அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow