திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தீ விபத்து - வாணவேடிக்கையால் விபரீதம்...
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின் போது வானவேடிக்கையால் தீவிபத்து நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ் பேட்டை கிராமத்தில் பிரம்மையா என்பவருடைய மகனுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்தையொட்டி குடும்பத்தினர் மணமகனை தங்கள் வீட்டில் இருந்து மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது தீப்பொறி விழுந்ததாக சொல்லப்பட்டுகிறது. இதனால் ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறியதால் திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் செய்வதறியாது அலறிஅடித்து ஓடினர்.
இந்த வெடி விபத்தில் மணமகனின் வீட்டின் முன் போடப்பட்டிருந்த பந்தல் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. மேலும் வானவெடிகள் வைத்திருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை தீயில் கருகி முழுவதும் சேதமடைந்தன. தீ சற்று கட்டுக்குள் வந்ததும் அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?