2014-ல் நிகழ்ந்த ஆணவக் கொலை; 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

Feb 19, 2024 - 21:13
2014-ல் நிகழ்ந்த ஆணவக் கொலை; 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நடந்த ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீரப்பு அளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சீதா என்பவரை சரவணன் என்பவர் காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு சரவணனின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சீதாவை அவரது வீட்டுக்கு செல்லும்படி சரவணன் கட்டாயப்படுத்தினார். ஆனால் சீதா செல்ல மறுத்ததால் சரவணன், அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவன்  ஆகியோர் சீதாவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சீதாவின் உடலை எரித்தும் உள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்த  நிலையில் சரவணன், அவரது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகிய 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீரப்பு வழங்கி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow