’பாடம் கற்றுக்கொடுக்கும் புலி’ - சச்சின் வெளியிட்ட வீடியோ
பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதினால் சுற்றுசூழல் மற்றும் மனித வாழ்க்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால், சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழலியலாளர்களும், அரசாங்கமும் நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், இதன் தீமைகளை பற்றி எடுத்துரைத்து மக்களிடேயே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், புலி ஒன்று நீர்நிலையில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டிலை வெளியே எடுத்துச் செல்லும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ”பிளாஸ்டிக்கை அகற்றும் புலி, இயற்கையின் அக்கறை குறித்து நமக்கு கற்றுக் கொடுக்கிறது. நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். நமது பூமியை பாதுகாப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இனியாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்போம்.. மற்றவர்களுக்கும் இது குறித்து எடுத்துரைப்போம்....
சச்சின் வெளியிட்டுள்ள வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்....
What's Your Reaction?