மூன்றாம் உலகப் போர் நிச்சயம் வரும்... ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை..!

அமெரிக்காவின் நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், அது நிச்சயம் மூன்றாம்  உலகப் போராகத் தான் இருக்கும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Mar 19, 2024 - 16:18
மூன்றாம் உலகப் போர் நிச்சயம் வரும்... ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 2 ஆண்டுகளை நெருங்க  உள்ள நிலையில், இந்த போரால் மேற்குலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1962-ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையே உக்ரைன் மீதான போரால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போர் ஆரம்பித்த பின் அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். 

இதனிடையே ரஷ்ய அதிபராக 6-வது முறை பதவியேற்றுள்ள புதின், ரஷ்யாவுக்கும், அமெரிக்க தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது பேரழிவை ஏற்படுத்தும் எனவும், அது மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோ ராணுவ வீரர்கள் உக்ரைனில் இருந்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என குற்றம்சாட்டும் புதின், பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ள புதின், நாங்கள் எதிரிகளைக் கண்டு அஞ்சவில்லை, அண்டை நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் என்பதற்காக இந்த நிலைப்பாட்டை எடுப்பதாக கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow