ஆரஞ்சு எச்சரிக்கை.. அக்னி நட்சத்திரத்தில் சுள்ளுன்னு வெயிலடிச்சாலும் ஜில்லுன்னு மழை இருக்கு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

May 4, 2024 - 11:28
ஆரஞ்சு எச்சரிக்கை.. அக்னி நட்சத்திரத்தில் சுள்ளுன்னு வெயிலடிச்சாலும் ஜில்லுன்னு மழை இருக்கு

தமிழ்நாட்டிற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற மே 7 மற்றும் 8 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி கூறியுள்ளது. 

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மக்கள் அச்சப்பட்டது போல இல்லாமல் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. 

முன் எப்போதும் இல்லாத அளவில் கோடை வெப்பம் முன்னதாகவே தொடங்கிய நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும் வெப்ப அலை கடுமையாக வீசியது. குறிப்பாக கடந்த இரு வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் மக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்குமாறு மாநில அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. அதைதொடர்ந்து மஞ்சள் எச்சரிக்கையும் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில், தமிழகத்திற்கு  இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.  அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அக்னி நட்சத்திரம் தொடங்கியபோதும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. இத்தனை நாட்களாக வாட்டி வதைத்த வெயில், சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow