France: கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் பதிவுசெய்த முதல் நாடானது பிரான்ஸ்...!

'இனி உங்கள் உடல் உங்களுக்குச் சொந்தம்' எனக்கூறி மகிழ்ச்சி தெரிவித்த பிரான்ஸ் நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டல்..!

Mar 5, 2024 - 10:50
France: கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் பதிவுசெய்த முதல் நாடானது பிரான்ஸ்...!

கருக்கலைப்பு உரிமை மசோதாவை நிறைவேற்றி அரசியலமைப்பில் முதல் நாடாக பிரான்ஸ் பதிவு செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நீண்ட காலமாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு சட்ட உரிமை கோரி பெண்கள் போராடி வருகின்றனர். அதேவேளையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இதனை சட்டமாக நிறைவேற்றவும் உறுதியளித்திருந்தார். இதன்படி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் பெற்றால் சட்டமசோதா நிறைவேற்றப்படும் என்ற சூழலில், கருக்கலைப்பு சட்டத்துக்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் மிகப்பெரிய ஆதரவோடு கருக்கலைப்பு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை பல லட்சம் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். சட்ட மசோதாவை வரவேற்று பேசிய பிரான்ஸ் நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டல் 'இனி உங்கள் உடல் உங்களுக்குச் சொந்தம்' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கருக்கலைப்பு உரிமை மசோதாவை நிறைவேற்றி அரசியலமைப்பில் பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் உள்ளது. இதைதொடர்ந்து பலர் ஆதரவளித்தாலும், இந்த சட்டமசோதாவிற்கு பல வலது சாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை, 1971-ம் ஆண்டுக்கு முன்புவரை கருக்கலைப்பு சட்டவிரோதமாக கருதப்பட்டது. இதன்பின் சாந்திலால் ஷா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் கருக்கலைப்பு செய்ய சில வழிகாட்டுதல்களுடன் அனுமதி வழங்க அக்குழு பரிந்துரைத்தது. அதன்படி MTP(medical termination of pregnancy regulation)படி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் உரிய வழிகாட்டுதலின் கீழ் மட்டும் கருக்கலைப்பு செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow