கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வெளிநாட்டுப் பெண்... ரூ.10லட்சம் இழப்பீடு வழங்கிய காவல்துறை...  

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் கடந்த 2ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை காவல்துறையினர் வழங்கியுள்ளனர். 

Mar 5, 2024 - 10:59
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வெளிநாட்டுப் பெண்... ரூ.10லட்சம் இழப்பீடு வழங்கிய காவல்துறை...  

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி இந்தியாவில் தங்களது வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இருசக்கர வாகனத்தில் ஜார்கண்ட் வந்த அவர்கள், அடுத்ததாக நேபாளம் செல்ல திட்டமிட்டிருந்தனர். தலைநகர் ராஞ்சியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஹன்ஸ்தியா காவல்நிலைய பகுதி அருகே, இரவு நேரத்தை கழிக்க தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல்,வந்து தம்பதியை தாக்கி, பெண்ணை கணவர் கண்முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். 

இதுகுறித்து தனது கணவருடன் சேர்ந்து கண்ணீர் மல்க அப்பெண் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு பல பிரபலங்களும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10லட்சம் இழப்பீடு வழங்கியிருப்பதாகவும், தம்பதிக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அம்மாநில காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை மற்றும் விசாரணை, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை அவரது கணவரை அழைத்து அளித்துள்ளதாக ஜார்கண்ட் துணை ஆணையர் ஆஞ்சநேயலு தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow