மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும். நீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் தரப்படும் எனவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அறிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
Rs. 20,000 per hectare relief for rain-affected crops

பயிர் சேதம் விரைவில் கணக்கெடுப்பு

 சென்னை எழிலகத்தில உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ஆய்வு மேற்கொண்டார். இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில்:

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம். நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. பயிர்சேத விவரங்களை உடனடியாக கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.தற்போதைய மழையில் 85 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்பு உள்ளது. கனமழையால் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

 நீர்நிலைகள் தூர்வாராதது தொடர்பாக .பி.எஸ். அரசியலுக்காக பேசுகிறார். நாளை காலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. குழுவிற்கு 30 பேர் என 330 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும்.தூத்துக்குடி, தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 85,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்கும் என்று தற்போதைக்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு கணக்கெடுப்பு முடிந்த உடனே நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நீர் முழுவதும் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் தரப்படும்.

உதயநிதி ஆலோசனை

டிட்வா புயல் பாதிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர், துணை மேயர் உள்பட அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow