GOAT: “கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்... சொல்லலாம்ன்னு நினைச்சேன்” கலாய்த்த ரசிகர்.. கடுப்பான வெங்கட் பிரபு

GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கேட்ட ரசிகரை, இயக்குநர் வெங்கட் பிரபு ட்ரீட் செய்த டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Mar 2, 2024 - 13:41
GOAT: “கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்... சொல்லலாம்ன்னு நினைச்சேன்” கலாய்த்த ரசிகர்.. கடுப்பான வெங்கட் பிரபு

சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் குறித்து வெங்கட் பிரபு போட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கோட் என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். விஜய்யின் 68வது படமான இதனை வெங்கட் பிரபு இயக்குவதாக அறிவிப்பு வெளியானது நாள் முதல் ரசிகர்கள் செம்ம ஹைப்பில் உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தளபதி 68 பூஜை விழாவிலேயே இந்தப் படத்தின் ஸ்டார் காஸ்டிங் குறித்து அபிஸியலாக அறிவிப்பு வெளியானது.

அதன்படி, விஜய்யுடன் டாப் ஸ்டார் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், ஜெயராம் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே கோட் படத்தில் நடித்து வருகிறது. லியோவுக்குப் பின்னர் மீண்டும் ஒரு மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதுமட்டும் இல்லாமல் விரைவில் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லவிருப்பதால், அவரது ரசிகர்களை கண்டிப்பாக திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் வெங்கட் பிரபு. 

இதனால் கோட் டைட்டில் போஸ்டர், பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்த வெங்கட் பிரபு, விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்திருந்தார். இதுபற்றி அடிக்கடி அப்டேட்டும் கொடுத்த வந்த வெங்கட் பிரபு தற்போது செம்ம கடுப்பாக ட்வீட் செய்து விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அதாவது கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் சீக்கிரம் வெளியாகும் சொல்லிட்டு இப்போ ஒரு வாரம் ஆகிடுச்சே என வெங்கட் பிரபுவை தகாத வார்த்தைகளால் ரசிகர் ஒருவர் கலாய்த்துள்ளார். 

இதனைப் பார்த்து கடுப்பான வெங்கட் பிரபு, “சொல்லனும்ன்னு நினைச்சேன், இப்போ இதுக்கு மேல எப்படின்னு நீங்களே சொல்லுங்க” என ரீ-டிவீட் செய்துள்ளார். எப்போதுமே ஜாலி மோடில் இருக்கும் வெங்கட் பிரபு, இப்போது டென்ஷனாகி ட்வீட் செய்துள்ளது விஜய் ரசிகர்களுக்கே ஷாக்கிங்காக அமைந்துள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow