Ghilli Re-Release: 20 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸாகும் கில்லி… விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதானா..?
விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ-ரிலீஸாகிறது.
சென்னை: கடந்த சில மாதங்களாகவே பல சூப்பர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது விஜய்யின் கில்லியும் இணைந்துள்ளது. விஜய்யின் கேரியரில் பக்கா கிளாஸ் & மாஸ் மூவியாக ரசிகர்களால் கொண்டாடப்படுவதில் கில்லியும் ஒன்று. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் தான் கில்லி. தரணி இயக்கத்தில் 2004ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஸ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
விஜய்யின் ஆக்ஷன், த்ரிஷாவின் க்யூட்னஸ், தரணியின் மேக்கிங், வித்யாசாகரின் சாங்ஸ், பிஜிஎம் என கில்லி வேற லெவலில் சொல்லி அடித்தது. அர்ஜுனரு வில்லு, அப்படிப் போடு, கொக்கர கொக்கரக்கோ என கில்லி பாடல்களின் வைப் 20 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கின்றன. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் மூவியான கில்லி, இப்போது 2கே கிட்ஸ்களுக்கும் ட்ரீட்டாக அமையவுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகிறது.
2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸானது கில்லி திரைப்படம். அப்போது 2004ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், கில்லி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வது அரசியல் ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது. கில்லி படத்தில் அரசியல் ரீதியான வசனங்களோ கட்சிகளோ கிடையாது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் களமிறங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.
இந்த சூழலில், தேர்தல் பரபரப்புக்கு இடையே கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்து மாஸ் காட்ட விஜய் முடிவு செய்துள்ளதாக கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன. இதனிடையே விரைவில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னோட்டமாகவும் கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?