அமலாக்கத்துறை வழக்கு.. மறுபக்கம் அனல் பறக்கும் பிரச்சாரம்.. மாஸ் காட்டும் மஹுவா மொய்த்ரா

Apr 3, 2024 - 15:40
அமலாக்கத்துறை வழக்கு.. மறுபக்கம் அனல் பறக்கும் பிரச்சாரம்.. மாஸ் காட்டும் மஹுவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மீது பணமோசடி பிரிவில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தேர்தல் களத்தில் மாஸ் காட்டி வருகிறார். மக்களவை தேர்தலுக்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப தொழிலபதிர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, மஹுவா மொய்த்ரா வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்தார்.

சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பணமோசடி பிரிவில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அவருக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் தர்ஷன் ஹிராநந்தானி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் மஹுவா மொய்த்ரா. வழக்கு விசாரணை ஒரு பக்கம் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ரா மீண்டும் தேர்தலில்  வெற்றி பெற்று மக்களவைக்கு செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow