தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.7,600, வெள்ளி கிலோ ரூ.55 ஆயிரம் குறைவு
தொடர்ந்து உச்சத்தை தொடர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம், வெள்ளி விலை. இன்றைய தினம் அதிரடியாக குறைந்துள்ளது.
நேற்றை தினம் காலை தங்கம் சவரனுக்கு ரூ.4,800 விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.600 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.16,200-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.1,29,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதே போன்று நேற்று வெள்ளி கிராம் ரூ.10 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.415 விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,000 விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 குறைந்தது. கிராமுக்கு ரூ.350 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,850 விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ரூ.4,800 குறைந்தது.ஓரே நாளில் தங்கம் சவரன் ரூ.7,600 குறைந்து விற்பனை ஆனது.
வெள்ளி விலையும் ஓரே நாளில் 20 ஆயிரம் ரூபாய் குறைந்தது. காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.10 குறைந்துள்ளது. ஓரே நாளில் ரூ.20 ஆயிரம் ரூபாய் கிலோவிற்கு வெள்ளி விலை குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.4,05,000 விற்பனை ஆனது.
வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,19,200 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900 விற்பனை ஆகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.55 குறைந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.55,000 ஆயிரம் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.350 விற்பனை ஆகிறது. நேற்றைய தினம் ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,00 விற்பனை ஆனநிலையில், இன்றைய தினம் ஒருகிலோ வெள்ளி ரூ,3,50,000-க்கு விற்பனை ஆகிறது.
What's Your Reaction?

