" நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இதை வைத்துதான் முடிவு செய்வோம்" - விக்கிரமராஜா பேச்சு

Feb 5, 2024 - 22:10
" நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை இதை வைத்துதான்  முடிவு செய்வோம்" -   விக்கிரமராஜா பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை   வணிகர்களின் அதிக அளவிலான கோரிக்களை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் ஆதரவு இருக்கும் என விக்கிரமராஜா பழனியில் தெரிவித்துள்ளார்.

பழனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜே பி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா தமிழக முதலமைச்சர் வாட்வரி சமாதான திட்டம் கொண்டு வந்ததன் மூலம் 2 லட்சம் வணிகர் குடும்பத்திற்கு ஒளியேற்றி வைத்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் மத்திய அரசு நாள்தோறும் சட்டங்களை மாற்றிக்கொண்டு ஜிஎஸ்டி வசூலில் பெரும் குளறுபடி செய்து வருவதாகவும் இதனால் வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தார். 

கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக சட்டங்கள் இருப்பதாகவும் இதனை எதிர்த்து மத்திய அரசை வலியுறுத்த டெல்லி செல்ல உள்ளதாகவும் விக்ரம ராஜா தெரிவித்தார். வாட் வரி சமாதான திட்டம் கொண்டு வந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.கொடைக்கானலில் கட்டிடம் கட்ட அனுமதி பிரச்சனை இருப்பதற்கு ஒரு சிலர் நீதிமன்ற உத்தரவை பணம் பார்த்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கோயம்பேடு ஏருந்து நிலையம் இருந்த இடத்தில் லூ லூ மால் வராது என அரசு கூறியுள்ள நிலையில் அப்படி லூலூ மால் வருவதாக இருந்தால் வணிகர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் , பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் இதற்காக தமிழக முதலமைச்சரை நேரில் சென்று வலியுறுத்த  உள்ளதாகவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பழனியில் தெரிவித்துள்ளார்.

பழனி அடிவாரம் கிரிவல பாதையில் ஆயிரக்கணக்கான கடைகள் நீதிமன்ற உத்தரவின் படி அகற்றி வருவதால் , தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை ஒழிப்பதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சுற்றுலா போன்ற இடங்களில் சிறிய வியாபாரிகளை அரசு  பிழைக்க விட வேண்டும் ,அரசு அவர்களை ஒழுங்கு படுத்த வேண்டும் ,அரசு நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும் , வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு என்பது குறித்து வருகின்ற 27 ம்  தேதி திருநெல்வேலியில்  மாநில பொதுக்குழுகூட்டம் நடைபெறுகிறது. வணிகர்களின் அதிக அளவிலான கோரிக்களை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் ஆதரவு இருக்கும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் திருப்பூர் ,கோவை ,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow