கண்ணாமூச்சி ஆடும் தங்கம் : சவரனுக்கு ரூ. 240 குறைவு

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் தங்கம் விலை ஏற்றம் கண்ட நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 

கண்ணாமூச்சி ஆடும் தங்கம் : சவரனுக்கு ரூ. 240 குறைவு
Sovereign is Rs. 240 less

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. நேற்று விலை உயர்ந்த நிலையில், இன்று (டிசம்பர் 2) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600 என்ற உச்சத்தை எட்டியது. அதே மாதம் 28-ம் தேதி ஒரு சவரன் ₹88,600 என்ற நிலைக்கு விலை சரிந்தது. கடந்த சில நாட்களாக மீண்டும் உச்சத்தை நோக்கிப் பயணித்து வந்த தங்கம் விலை, நேற்று (டிசம்பர் 1) கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 2) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்று இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.196-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் கவலையில் உள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow