MyV3 Ads நிறுவனர் உட்பட 150 பேர் கைது

கோவையில் MYV3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை கோவை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Feb 10, 2024 - 17:47
MyV3 Ads நிறுவனர் உட்பட 150 பேர் கைது

கோவையில் இயங்கி வந்த MYV3 Ads ஆன்லைன் நிறுவனம் மீது கோவை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 360 ரூபாய் முதல் ரூ.1.20 லட்சம் வரை முதலீடுகளைப் பெற்று ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்கள் தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்தை போலீசார் விசாரித்தனர். அப்போது, அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்த MyV3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் தங்களுக்கு முதலீடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், தங்கள் நிறுவனத்தின் மீது சிலர் வீண் பழி போட முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். 

அப்போது காவல் ஆணையர் ஆலோசனையில் இருப்பதால் புகாரை பெற்று கொண்ட காவலர்கள், அடுத்த வாரம் வருமாறு கூறியதால் சக்தி ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால், சக்தி ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow