தொடர்ந்து சரிந்த தங்கம் விலை: இன்றைய தினம் மீண்டும் விலை உயர்வு 

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்றைய தினம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

தொடர்ந்து சரிந்த தங்கம் விலை: இன்றைய தினம் மீண்டும்  விலை உயர்வு 
தங்கம் விலை திடீர் உயர்வு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. நாள் தோறும் தங்கத்தின் விலை ஏற்றத்தால் 1 லட்ச ரூபாயை தாண்டி சவரன் விற்பனை ஆகி வருகிறது. இது நகைப்பிரியர்களுக்கு பெரும் நெக்கடியாக அமைந்து வருகிறது. ஆனால் 1 லட்ச ரூபாய்க்கு கீழ் சவரன் குறைவதாக இல்லை. 

நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1680 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,30,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ,640 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ 2,35,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow