கண்ணாமூச்சி ஆடும் தங்கம், வெள்ளி : சவரனுக்கு ரூ.160 உயர்வு
வார கடைசி நாளான இன்று வழக்கம் போல தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 வரை விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் வாரத்தின் தொடக்கத்தில் சவரன் 1 லட்ச ரூபாய் தொட்டது. இதன் பிறகு சற்றே குறைந்த தங்கம் அதன் பிறகு மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக உயர தொடங்கியது.
தங்கம் விலை நேற்றைய தினம் அதிகரித்தது. அதன்படி கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் மேலும் உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.221-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கம் வெள்ளி விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போன்று சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.226க்கு விற்பனையாகிறது. கிலோ வெள்ளி ரூ 2,26,000-க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்களை கவலை அடைய செய்துள்ளது.
What's Your Reaction?

