இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் ! முக்கிய புள்ளி கைது !

ராமேஸ்வரத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

May 9, 2024 - 18:27
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் ! முக்கிய புள்ளி கைது !

கடந்த, ஜனவரி 7ஆம் தேதி இலங்கையில் இருந்து கடல்வழியாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

இதேவேளையில் படகில் வந்த நபர் சாலையில் காத்திருந்த நபர் ஒருவரிடம் நெகிழிப்பை ஒன்றை கொடுத்துச்சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து அதை வாங்கியவர், பைக்கில் வேகமாக சென்றிருக்கிறார். 

இதை கண்காணித்த சுங்கத்துறையினர்,  பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்றபோது அவர்களை தாக்கிவிட்டு அந்த நபர் தப்பிச்சென்றார். அப்போது கையில் இருந்த பையையும் கீழே போட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடினார். 

இதையடுத்து அவர் விட்டுச்சென்ற பையில் 7.7 கிலோ எடையுடைய தங்கக்கட்டிகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.4.5கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தநிலையில், கடத்தலில் ஈடுபட்டது ஜாபர் என்பதும், அவருடைய கூட்டாளியுடன் இதை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகியிருந்த ஐசக்-கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடம் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், ஐசக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மைக்கேல் ராயப்பன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow