Good Bad Ugly: லோகேஷ் ஸ்டைலில் ஆதிக்… அஜித் ரசிகர்களுக்கு Good Bad Ugly டீசர் ரெடி..?
அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். குட் பேட் அக்லி என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படம் 2025 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.
சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் கமிட்டாகிவிட்டார். அதன்படி அஜித்தின் 63வது படமான இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என டைட்டிலை அறிவித்த படக்குழு, இது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவித்துவிட்டது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.
அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படத்தை தரமான ஆக்ஷன் ஜானரில் இயக்க முடிவு செய்துள்ளாராம். இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்ஸ் எப்போது வரும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். அதேநேரம் இப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்பாகவே அஜித் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் ஆதிக் ரவிச்சந்திரன். லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் இந்த ட்ரீட் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது லோகேஷ் தான் இயக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அதன் டைட்டில் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹைப் கொடுப்பது வழக்கம். அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் டீசரை ஷூட்டிங் தொடங்கும் முன்னரே வெளியிட ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளாராம்.
இந்த டீசருக்கான படப்பிடிப்பை ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே சைலண்டாக முடித்துவிட்டார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் அஜித் மட்டுமே நடித்துள்ளதாகவும், அவரது லுக் செம்ம மிரட்டலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்தாலும் முடியாவிட்டாலும் குட் பேட் அக்லி டீசர் வெளியாகும் எனத் தெரிகிறது. அதன்படி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி குட் பேட் அக்லி ப்ரோமோ டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் டீசருடன் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?