ஓட்டு போடாவிட்டால் வந்து விழும் பாசக்கயிறு.. கன்னியாகுமரியில் எச்சரித்த எமதர்மராஜா

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு வந்த எமதர்மராஜாவும் சித்திரகுப்தனும் வாக்களிக்காதோரை பாச கயிறை வீசி எமலோகம் அழைத்து செல்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

Apr 3, 2024 - 14:42
ஓட்டு போடாவிட்டால் வந்து விழும் பாசக்கயிறு.. கன்னியாகுமரியில் எச்சரித்த எமதர்மராஜா

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டீ போட்டுக்கொடுத்தும் தோசை சுட்டுக்கொடுத்தும் பலரும் பல வகைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். 100 சதவிகித வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபைத் தொகுதியில் இடைதேர்தல் நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்சிகள் நடத்தபட்டு வருகின்றன. 

அந்த வகையில் களியக்காவிளை  சோசியல் வெல்பேர் டிபார்மெண்ட் இணைந்து பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் சித்திரகுப்தன் , எமதர்மராஜா வேடமணிந்தவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வாக்கிற்கு பணம் கொடுக்க கூடாது பணம் வாங்கவும் கூடாது வாக்காளர் அனைவரும்  கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் அவர்கள் தெரிவித்தனர்.  வேட்பாளர்களை பிடிக்காவிட்டால் நோட்டாவை பயன்படுத்த வேண்டும் என்று கூறிய எமதர்மராஜன்,  ஓட்டுபோடாதவர்களை பாசகயிறை வீசி எமலோகத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார் எமதர்மராஜா.

வாக்கிற்கு பணம் வாங்குவோரின் படத்தை அனுப்பினால் உடனே பாச கயிறை வீசி தூக்கி விடுவேன் என்றும் எமதர்மராஜா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிலையில் மார்தாண்டம் காவல்நிலையத்திற்கு வந்த எமதர்மனும் சித்ரகுப்தனும், காவல் ஆய்வாளர் வேல்கண்ணி உதயரேகாவை சந்தித்து அவர்களது முன்னிலையில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, வாக்களிக்க பணம் கொடுப்பவர்கள் பற்றி புகார் அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆய்வாளர் உறுதி அளித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow