குக் வித் கோமாளிக்கு குட் பை... பட்டென்று முடிவெடுத்த வெங்கடேஷ் பட்! நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு?  

விரைவில் அடுத்ததொரு புதிய நிகழ்ச்சியில் இணைவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Feb 24, 2024 - 07:36
குக் வித் கோமாளிக்கு குட் பை... பட்டென்று முடிவெடுத்த வெங்கடேஷ் பட்! நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு?  

விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி தொடரான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விடைபெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், அடுத்து சீசனில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

புகழ்பெற்ற சமையல் கலைஞரான வெங்கடேஷ் பட், விஜய் தொலைக்காட்சி நடத்தி வந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.தொடர்ந்து 4 சீசன்கள் நடுவராக இருந்த அவர், சின்னத்திரை நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் செய்யும் நகைச்சுவையான செயல்களுக்கு ஈடுகொடுத்து, சமையல் துறையிலும் தமக்கே உரிய திறமையுடன் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவருக்குப் பல புகழ் கிடைத்த நிலையில், அண்மையில் அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 

அதில், அண்மைக் காலமாக குக் வித் கோமாளி 5-ம் சீசனுக்காக பேச்சு தொலைக்காட்சி வட்டாரத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து முற்றிலுமாக விலகுவதாகத் தெரிவித்துள்ள வெங்கடேஷ் பட், தமக்குள் இருந்த நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டுவர இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். 

விரைவில் அடுத்ததொரு புதிய நிகழ்ச்சியில் இணைவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ள வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி சீசன் 5-க்கு வாழ்த்துகளோடு, அதை உருவாக்கி வரும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow