நீண்ட நாள் கோரிக்கை... இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி...

Feb 23, 2024 - 22:12
நீண்ட நாள் கோரிக்கை... இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி...

இலங்கை சிறப்பு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் சாந்தன் தங்க வைக்கப்பட்டிருந்தாா். சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அவரது தாயார் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சாந்தனும் பலமுறை நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 24-ஆம் தேதி கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னர் உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சாந்தனுக்கு கல்லீரல் பிரச்னை மட்டுமின்றி பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவா்கள் கூறினா்.

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த நிலையில் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது. இதையடுத்து அவர் விரைவில் இலங்கை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow