Gold price today: ஏறிய வேகத்தில் கிடுகிடுவென இறங்கும் தங்கம் விலை... பொதுமக்கள் ஹேப்பி

கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.250 வரை குறைந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது தங்கம்.

Apr 5, 2025 - 10:15
Gold price today: ஏறிய வேகத்தில் கிடுகிடுவென இறங்கும் தங்கம் விலை... பொதுமக்கள் ஹேப்பி
Gold rate today (april 5)

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.

கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உட்பட மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதனால், உலகளவில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டது. அதில் தங்கமும் தப்பவில்லை.  ஏப்ரல் 4 ஆம் தேதி 22 கேரட் மதிப்புள்ள தங்கம் கிராமுக்கு ரூ.160 வரை குறைந்த நிலையில், இன்று கிராமுக்கு மேலும் ரூ.90 வரை குறைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை என்ன?

நேற்றைய தினம் சென்னையில், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,400 ஆக விற்ற நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.90 வரை குறைந்து ரூ.8,310 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியிருந்த நிலையில் இந்த வீழ்ச்சி கொஞ்சம் ஆறுதல் அளித்துள்ளது எனலாம். சவரனுக்கு ரூ.720 வரை குறைந்து சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.66,480 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை ஒருபக்கம் குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு 5 ரூபாய் வரை குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.103 ஆக சென்னையில் தற்போது விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை எப்போது வேண்டுமானாலும் திரும்ப கிடுகிடுவென உயர வாய்ப்புள்ள நிலையில், இப்போதே கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர் குடும்பஸ்தன்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow