சென்னையில் 6 மாதத்தில் 162 பேர் மீது குண்டாஸ் வழக்கு..2578 குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கம்

நடப்பாண்டில் 01.01.2024 முதல் 24.06.2024 வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட 162 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சோதனையில், 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Jun 25, 2024 - 12:29
சென்னையில் 6 மாதத்தில் 162 பேர் மீது குண்டாஸ் வழக்கு..2578 குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கம்

 சென்னை பெருநகர காவல்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். 

காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 18.06.2024 முதல் 24.06.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, 40 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 9 செல்போன்கள், பணம் ரூ.600, இருசக்கர வாகனம்,  2 ஆட்டோக்கள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்  பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் (NDPS) தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 1,319 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2,578 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, இதுவரையில் மொத்தம் 1,239 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 

மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 24.06.2024 வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட 162 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow