தஞ்சையில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து..ஒருவர் உயிரிழப்பு - 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Apr 24, 2024 - 09:14
தஞ்சையில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து..ஒருவர் உயிரிழப்பு -  25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தஞ்சாவூர் அருகே அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

அய்யம்பேட்டை அருகே அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த கல்லூரி அருகே  கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு புறநகர் பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பேருந்தில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி(50) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விபத்து குறித்து அய்யம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow