முடிந்தது தேர்வு.. தொடங்கியது கோடை விடுமுறை.. குஷியில் பள்ளி மாணவர்கள்

நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

Apr 24, 2024 - 07:46
முடிந்தது தேர்வு.. தொடங்கியது கோடை விடுமுறை.. குஷியில் பள்ளி மாணவர்கள்

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்துள்ளன. 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் முடிந்து விட்டது. 11 மற்றும், 10ம் வகுப்புக்கு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஒன்று முதல் 9ம் வகுப்புகளுக்கு, கடந்த 8ம் தேதி வரை சில பாடங்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்தது.  பின்னர், ரம்ஜான், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டுக்கும், அதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் பொது தேர்தல் ஓட்டுப்பதிவுக்கும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

இந்த விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) அறிவியல் தேர்வும், நேற்று (ஏப்ரல் 23) சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது. 

இதையடுத்து தேர்வு நிறைவடைந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் அதற்கு பின்னரே பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow