குரூப்-2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு… பெண் ஒருவர் முதலிடம்... ஏப்ரல் 12 இல் கலந்தாய்வு...
Group-2A
அரசு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 151 பணியிடங்களை நிரப்புவதற்கான கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிப்பு வெளியானது. இதில் 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாகவும், 5,990 காலி இடங்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களாகவும் பிரிக்கப்பட்டன.
இந்நிலையில் முதல்நிலைத் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற 50 ஆயிரம் பேர், அடுத்தக்கட்டமான தேர்வை எதிர்கொண்டனர். இதனை தொடர்ந்து, குரூப்-2 நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கான முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இதில் 5,990 பணியிடங்கள் கொண்ட நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம் சுமார் 14,500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் குரூப்-1 தேர்வு முடிவுகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. 198 பேர் கொண்ட பட்டியலில் 850 மதிப்பெண்களுக்கு 587.25 மதிப்பெண்கள் பெற்ற பெண் ஒருவர் முதலிடத்தை பிடித்துள்ளார். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 198 பேருக்கும், ஏப்ரல் 12 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?