குரு பெயர்ச்சி பலன் 2024: மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு மாறும் குரு பகவான்.. ஒரு வரியில் பலன் பரிகாரங்கள்

குருபகவான் செவ்வாய் வீடான மேஷ ராசியில் இருந்து இன்று (மே 1) முதல் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாலை 5 மணிக்கு மேல் குரு பெயர்ச்சி நிகழ்கிறது. குரு பகவான் ஓராண்டு காலம் ரிஷப ராசியில் பயணம் செய்வார். குரு பெயர்ச்சியால் அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

May 1, 2024 - 07:19
குரு பெயர்ச்சி பலன் 2024:  மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு மாறும் குரு பகவான்.. ஒரு வரியில் பலன் பரிகாரங்கள்


அஸ்வினி: சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். பண வருமானம் பல வழிகளிலும் அதிகரிக்கும்.  மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.  பரிகாரம் : வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றவும்.

பரணி:  நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும். பண வருமானம் அதிகரிக்கும் புது வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. பரிகாரம்: நவகிரக குரு பகவானை வியாழக்கிழமை வணங்கவும்.

கார்த்திகை: குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். பரிகாரம்: மஞ்சள் வஸ்திரம் சாற்றி குரு பகவானை வணங்கலாம்.

ரோகிணி: குடும்பத்தில் நீண்ட நாட்கள் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையில் புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வும் அதிகரிக்கும். பரிகாரம்: வியாழக்கிழமை அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மிருகஷீரிடம்: குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுப நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் நடைபெறும். பரிகாரம்: வியாழக்கிழமையில் சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபடலாம். 

திருவாதிரை: பண வருமானம் அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.  சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பரிகாரம்: குரு பகவானை வியாழக்கிழமை  மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம்: தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றமும் கிடைக்கும். பரிகாரம்: சிவ ஆலயங்களில் குரு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்

பூசம்:  குரு பகவான் பண வருமானத்தை தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். லாப குருவினால் இதுநாள் வரை இருந்த கஷ்டங்கள் கவலைகள் நீங்கும். பரிகாரம்: நினைத்த காரியம் நிறைவேற குரு பகவானை வழிபடுங்கள். 

ஆயில்யம்:  சுபகாரியங்கள் செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கும்.  அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். பரிகாரம்: குருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க நெய் தீபம் ஏற்றி குருவை வழிபடுங்கள்.

மகம்:  செல்வமும், செல்வாக்கும் தேடி வருகிறது. வீடு கட்ட மனை வாங்கலாம். புது வீட்டு கட்டலாம் பல வழிகளிலும் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பரிகாரம்: மன மகிழ்ச்சி அதிகரிக்க வியாழக்கிழமை குரு பகவானை வழிபடுங்கள்.

பூரம்:  வேலையில் புரமோசன் கிடைக்கும் சம்பள உயர்வும், இடமாற்றமும் தேடி வரும். பணம் பல வழிகளில் இருந்தும் வரும். பரிகாரம்: வியாழபகவானை குரு ஹோரையில் நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

உத்திரம்: நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் உறவினர்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பரிகாரம்: வியாழக்கிழமையில் சிவ ஆலயம் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்க குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். 

ஹஸ்தம்:  புகழும், பெருமையும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வியாழக்கிழமைகளில் வணங்க நன்மைகள் நடைபெறும். 

சித்திரை:  பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். லாபத்தை அள்ளித்தரும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. பரிகாரம்: வியாழ பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும். 

சுவாதி: பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கப்போகிறது. கடன்கள் தீரும். குடும்பத்தில் நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். பரிகாரம்: குரு பரிகாரத்தலங்களுக்கு சென்று குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

விசாகம்: கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும்.  பதவி உயர்வு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. பரிகாரம்: குரு பகவானை வியாழக்கிழமையில் குரு ஹோரையில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் நடைபெறும். 

அனுஷம்: வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து பங்கு, பாகங்கள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். பரிகாரம்: குரு பகவானை நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும். 

கேட்டை: குருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கப்போகிறது.   சுப செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு வீட்டில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். பரிகாரம்:  வியாழக்கிழமையில் குரு பரிகாரத்தலங்களுக்கு சென்று இனிப்பு வாங்கி தானம் தர நன்மைகள் பலன்கள் அதிகரிக்கும். 

மூலம்: சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் அகலும் வருமானம் அதிகரிக்கும். குரு பகவானின் அருளால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும். பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பரிகார தலங்களுக்கு சென்று கொண்டைக்கடலை தானமாக கொடுக்கலாம். 

பூராடம்: பண வருமானம் பல வழிகளிலும் வரும். கடன்கள் அடைபடும். நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். சுப காரியங்கள் அதிகம் முறையில் நடைபெறும். பரிகாரம்: மன நிம்மதி அதிகரிக்க வியாழக்கிழமையில் சர்க்கரை பொங்கல் செய்து தானம் கொடுங்கள்.

உத்திராடம்: குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பரிகாரம்: குரு பகவானுக்கு உகந்த மஞ்சள் நிற இனிப்பு வாங்கி தானம் தர நன்மைகள் அதிகரிக்கும். 

திருவோணம்: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வழக்குகள் சாதகமாக முடியும். பணம் பல வழிகளிலும் திரும்ப வரும். பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானை வணங்க குடும்பத்தில் நிம்மதி கூடும். 

அவிட்டம்: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியம் ஜெயமாகும்.   தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பண விசயத்தில் கவனம் தேவை. பரிகாரம்: குரு பரிகாரத்தலங்களில் எலுமிச்சை சாதத்தை நைவேத்தியம் செய்து தானம் தரலாம். 

சதயம்:  குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பேச்சில் கவனம் தேவை. இடம் பொருள் அறிந்து பேசினால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம் விசயத்தில் கவனமாக இருக்கவும். பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

பூரட்டாதி:  துன்பங்களும், துயரங்களும் நீங்கும் காலம் வந்துவிட்டது. பணப்பிரச்சினைகள் தீரும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. பரிகாரம்: குரு பகவானை வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 

உத்திரட்டாதி:  புதிய வீடு, கட்டிடங்களை கட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். பரிகாரம்: குரு பகவானின் அருள் கிடைக்க வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

ரேவதி: முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பரிகாரம்: வியாழக்கிழமையில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து குரு பகவானை நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். நன்மைகள் அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow