ஏற்காடு மலைப்பாதையில் கோர விபத்து. 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 6 பேர் மரணம்.. 40 பேர் படுகாயம்

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Apr 30, 2024 - 22:57
May 1, 2024 - 06:18
ஏற்காடு மலைப்பாதையில் கோர விபத்து. 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 6 பேர் மரணம்.. 40 பேர் படுகாயம்


கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க ஏற்காட்டிற்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். தனியார் வாகனங்களிலும் அரசு பேருந்துகளிலும் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்து ஏற்காட்டின் அழகை ரசித்து வருகின்றனர்

இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தின் அதிகரிப்பால் ஏற்காட்டிற்கு சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் தனியார் பேருந்து ஒன்றின் மூலம் இன்று மாலை சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். தனியார் பேருந்து 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்து கொண்டிருக்கும்போது பேருந்து கட்டுப்பட்டை இழந்து பிரேக் பிடிக்காததால் ஓட்டுநர் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனது.

இதனால் 13-வது கொண்டவசி வளைவில் இருந்து பக்கவட்டு தடுப்புச் சுவரை இடித்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பேருந்தில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். விபத்தில்  சிக்கியவர்களில் சம்பவ இடத்திலே ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர்  விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் 

மாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் சேலம் மாநகராட்சி மேயர் ஆகியோர் நேரில் சென்று அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். அரசு மருத்துவமனையில் தற்போது வரை 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு 
ஏற்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து பதினோராவது கொண்டை ஊசி வளைவில் திடீரென விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியான துயரமும், 20-க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும்,  மனவேதனையும் அடைந்தேன். 

பேருந்து விபத்தில் உறவுகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும், படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு என்னுடைய  ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow