Guru peyarchi palan 2024: குரு பெயர்ச்சி.. திடீர் யோகம்.. மே 1 முதல் குரு பகவானின் அருள் மழை யாருக்கு?

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நாளைய தினம் ( மே 1) முதல் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிக்காரர்கள் மீது விழுகிறது. குரு பகவானின் பார்வை, பயணத்தால் துலாம், விருச்சிகம் தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Apr 30, 2024 - 12:30
Guru peyarchi palan 2024: குரு பெயர்ச்சி.. திடீர் யோகம்.. மே 1 முதல் குரு பகவானின் அருள் மழை யாருக்கு?

துலாம்:  குரு பெயர்ச்சியால் மே 1ஆம் தேதி முதல் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. குருவின் அருள் பார்வையால் உங்களுக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும்.  வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்:  ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் தொட்டது துலங்கும். குருவின் அருள் பார்வை உங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு செல்லப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகம் கிடைக்கும். 

தனுசு: குரு பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புரமோசனும் சம்பவ உயர்வும் கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார்.  சுப காரியங்கள் கை கூடி வரும். சுப விரையங்கள் ஏற்படும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். 

மகரம்: குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார்,  குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது.  வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிய கௌரவப் பதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

கும்பம்: சனி பகவனை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறீர்கள்.

மீனம்:  குரு பெயர்ச்சியால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம்.  குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். மூன்றாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலனால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. வீடு தேடி அதிர்ஷ்ட தேவதை வரப்போகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow