இயற்கை எரிவாயு பேருந்துகள்.. தமிழக சாலையில் இனி ஓடப்போகும் பசுமை பஸ்கள்.. தமிழக அரசு அதிரடி
பேருந்துகளுக்கான டீசல் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, அரசு பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயக்கும் பேருந்துகளாகவோ மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் பழைய பேருந்துகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலாவதியான பழைய பேருந்துகளை இயக்கக்கூடாது என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. எனவே புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை பொறுத்தவரை சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாடு முழுவதும் தினசரி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.
பேருந்துகளுக்கான டீசல் செலவினம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, அரசு பேருந்துகளை மின்சார பேருந்துகளாகவோ அல்லது இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயக்கும் பேருந்துகளாகவோ மாற்ற பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தன.
குறிப்பாக டீசலுக்கு பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயக்கினால் கிலோமீட்டர் கூடுதலாக கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வின் தெரியவந்ததாகவும், வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை இயற்கை எரிவாயுவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இரண்டு இயற்கை எரிவாயு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், தொடர்ந்து, ஒவ்வொரு பேருந்துகளாக இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?