ஆவடி குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கல்- 3 பேர் கைது
150 கிலோ மதிப்புள்ள பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
ஆவடி குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கி வைத்த மூன்று பேரை கைது செய்து ஆவடி காவல்துறை சிறையில் அடைத்தனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நம்பர் 3070-இல் குடோன் ஒன்று அமைந்துள்ளது. அந்த குடோனை மூன்று நபர்கள் வாடகைக்கு எடுத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா புகையிலை பொருட்களான கூல் லிப், ஹேண்ஸ், மாவா போன்ற புகையிலை பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
ஆவடி காவல் ஆணையரரின் உத்தரவின்பேரில் பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டு வசதி எப்படி இருக்கு பகுதியில் அமைந்துள்ள குடோனில் திடீர் ஆய்வு செய்த ஆவடி காவல்துறையினர் குடோனில் மறைத்து வைத்திருந்த சுமார் 150 கிலோ மதிப்புள்ள பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்தனர். மூன்று நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்பு கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு அதிகாரி வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்படி இடத்திற்கு விரைந்து குடோனில் உள்ள பொருட்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு கடை மற்றும் குடோனை பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டார். மேற்படி தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட சோமசுந்தரகனேஷ் (53),இருலான்டி (37), மகேந்திரகுமார் ஆகியோர் ஆவடி காவல் துறையினர் மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?