ஓரத்தநாடு: வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அலுவலக பணியாளர்கள் நின்று கொண்டு பணி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது

Dec 13, 2023 - 17:32
Dec 13, 2023 - 20:03
ஓரத்தநாடு: வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஓரத்தநாடு ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு  ஒன்றியக்குழு தலைவராக பார்வதி சிவசங்கர் என்கிற பெண் இருந்து வருகிறார். இவர் ஒன்றிய வட்டார வளர்ச்சகி அலுவலர் துரை ரகுநாதனிடம் அடிக்கடி முட்டல் மோதலில் ஈடுபட்டு  வருகிறார். தற்போது அரசு பணத்தில் சமீபத்தில் வாங்கப்பட்ட நாற்காலிகளை ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நாற்காலிகளை பார்வதி சிவசங்கர் தான் வாங்கியதாகவும், இவைகளை அலுவலக அரசு பணியாளர்கள் எப்படி பயன்படுத்தலாம் எனக் கூறி சேர்கள் அனைத்தையும் பெருந்தலைவர் தனது உதவியாளர் மூலம்  பணி செய்துகொண்டிருந்து பணியாளர்களை எழுந்திருக்கச் செய்து  தனி அறையில் வைத்து பூட்டிவிட செய்துள்ளார்.

இதனால் அலுவலக பணியாளர்கள் நின்று கொண்டு பணி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் துரை ரகுநாதன் தலைமையில் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றியக்குழு தலைவரின் செயலைக் கண்டித்து மதியம் முதல் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதனால் ஒரத்தநாட்டில் பரபரப்பு காணப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow