சென்னையில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை ?
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்க அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
சென்னையில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஆனால் நேற்றைய தினம் சென்னையில் மழை ஏதும் பெய்யவில்லை. இன்றைய தினம் சென்னைக்கு மழை எச்சரிக்கை விடப்படாத நிலையில், நேற்று நள்ளிரவு முதலே மழை பெய்து வருகிறது.
சென்னையில் தொடர் மழை காரணமாக முக்கிய சாலைகள், தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழையிலும் மாணவர்கள் இன்று நனைந்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று இருக்கிறார்கள்.
மழை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரி மைதானங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர்கள் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர்கள் மழை ஏற்ப இது தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்கவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
What's Your Reaction?

